இன்றைய ராசிபலன்: 14 மே , 2024

குரோதி வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.05.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்வீர்கள்.

கூட்டுத் தொழிலில் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள்.

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவீர்கள்.

ரிஷபம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து நிம்மதி பெறுவீர்கள்.

தூரதேசப் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள்.

மிதுனம்

எல்லாவிதமான குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள்.

பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலான விஷயங்களைக் கடப்பீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்ப்பீர்கள்.

கடகம்

தொழிலில் அதிகமான முதலீடு செய்யாதீர்கள்.

ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள்.

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள்.

கன்னி

தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள்.

தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.

கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரீசியன்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவீர்கள்.

துலாம்

கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைப்பீர்கள்.

தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள்.

வேலை இடங்களில் இருந்த பிரச்சனைகளை களைவீர்கள்.

விருச்சிகம்

நேற்று தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையை போக்குவீர்கள்.

வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாக்குவீர்கள்.

தனுசு

கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலனை அடைய மாட்டீர்கள்.

அனாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திப்பீர்கள்.

பெண்களிடம் எட்டி நின்றே பழகுங்கள்.

மகரம்

உற்சாகமான பேச்சால் உறவுகளைப் பலப்படுத்துவீர்கள்.

வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்துவீர்கள்.

குடும்பத்தில் குதூகலத்தை உண்டாக்குவீர்கள்.

வேலை இடங்களில் இருந்த பிரச்சனையை விலக்குவீர்கள்.

கும்பம்

தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்ப்பார்கள். சாதுரியமாக சமாளிப்பீர்கள்.

சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள்.

மீனம்

சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.

பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை தீர்ப்பீர்கள்.

மனைவி குழந்தைகளால் மனநிம்மதி இழப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024