இன்றைய ராசிபலன்: 13 ஏப்ரல், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை 13.04.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வியாபாரத்தை வெகு நிதானமாக நடத்துவீர்கள்.

கடன்களை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள் குத்து வேலையால் உள்ளம் சோர்வடைவீர்கள்.

பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள்.

உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகளின் உறுதுணையை பெறுவீர்கள்.

மிதுனம்

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.

வாகனங்களில் செல்லும்போது சாலையில் கவனத்தை சிதற விடாதீர்கள்.

பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொல்ல மறக்காதீர்கள்.

கடகம்

திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

அதன் மூலம் தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம் தொடர்பான பயணங்களில் நன்மையை அடைவீர்கள்.

உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள்.

சிம்மம்

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

கன்னி

எதிரிகள் உங்கள் வியாபாரத்தைக் கெடுக்க நினைப்பதை உணர்வீர்கள்.

எச்சரிக்கையாக நடந்து அதை தடுப்பீர்கள்.

எடுத்த காரியத்தில் ஏதாவது ஒரு இடையூறை சந்திப்பீர்கள்.

துலாம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள்.

அதனால் அவசரப்பட்டு விரயத்தை சந்திப்பீர்கள்.

பங்குச்சந்தை முதலீடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத வகையில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

நண்பர்கள் உறவினர்கள் உதவியால் வீட்டை புதுப்பிப்பீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரித்து சந்தோஷப்படுவீர்கள்.

தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.

தனுசு

உறவுகளில் இருந்த சிக்கலை பேசி தீர்ப்பீர்கள்.

குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள்.

மகரம்

பணியாளர்கள் அலுவல் சுமையால் மிகுந்த அவதிப்படுவீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் குழப்பத்தால் கோபம் அடைவீர்கள்.

முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள்.

கும்பம்

ரியல் எஸ்டேட் தொழிலில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள்.

வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள்.

உற்ற நண்பர்கள் உதவியை பெறுவீர்கள்.

மீனம்

தொழில் துறையில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள்.

பொறுப்போடு சகோதரியின் திருமண ஏற்பாட்டை செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024