குரோதி வருடம் ஆனி மாதம் 27 ஆம் தேதி வியாழக்கிழமை 11.07.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள்.
அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள்.
வியாபாரம் நீங்கள் நினைத்த மாதிரி நடக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள்.
ரிஷபம்
நீங்கள் விருப்பப்பட்டு வாங்கிய தோப்பில் பராமரிப்புப் பணியை மேற்கொள்வீர்கள்.
விவசாய வேலைகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
நம்பிக்கையான நபரிடம் பணத்தைக் கொடுத்து வைப்பீர்கள்.
மிதுனம்
பெண்ணின் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிடுவீர்கள்.
வீட்டில் பழுதான மின்சார உபகரணங்களை மாற்றுவீர்கள்.
குடும்பத்துடன் சென்று துணிமணிகள் கட்டில் மெத்தை வாங்குவீர்கள்.
கடகம்
அரசியல் தலைவர்கள் சிறப்பாக வேலை செய்து மக்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் தங்கள் தொழிலில் நேர்த்தியாக நடந்து கொள்வீர்கள்.
டுமாறி விழுந்த மனைவிக்கு மாவு கட்டு போடுவீர்கள்.
சிம்மம்
தொலைதூரப் பயணங்களில் தொல்லைகளை அனுபவிப்பீர்கள்.
ஒத்துழைப்பு தர மறுக்கும் ஊழியர்களால் உற்பத்தியில் பின்னடைவை சந்திப்பீர்கள்.
குடும்பத்தில் உங்கள் கருத்தை திணிக்க முயற்சி செய்யாதீர்கள்.
கன்னி
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக பழகினால் இழப்பை சந்திக்க மாட்டீர்கள்.
கேலி கிண்டல் செய்கிறோம் என்று அவமானப்பட்டு விடாதீர்கள்.
கூடிப் பேசி உங்களோடு வேலை பார்ப்பவர்கள் உங்களைக் கவிழ்க்க முயற்சி செய்வதை உணர்வீர்கள்.
துலாம்
உங்கள் தொழிலுக்கு தேடி வந்து ஒரு நபர் உதவி செய்வார்.
நம்பிக்கையாக முதலீடு செய்து பக்கபலமாக இருப்பார்.
சிறப்பாக வியாபாரம் செய்து பொறுப்பாக பணம் சேர்ப்பீர்கள்.
எதிர்காலத்திற்காக திட்டம் போட்டு சேமிக்க நினைப்பீர்கள்.
விருச்சிகம்
நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அபாரமான முன்னேற்றம் காண்பீர்கள்.
என்றோ வாங்கிப்போட்ட சொத்தின் மூலம் இன்று பெரிய வருமானம் பார்ப்பீர்கள்.
கடைகளில் செய்த முதலீடுகளால் கணிசமான லாபம் பெறுவீர்கள்.
தனுசு
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சிக்கல்கள் உண்டாகி சிரமப்படுவீர்கள்.
காதலியின் கோபத்தை தணிக்க பணிவாக பேசுவீர்கள்.
அவசரமான வேலையாக இருந்தாலும் நிதானமாகச் செய்வீர்கள்.
மகரம்
அடுத்தவர் பேச்சைக் கேட்டு தொழிலில் அகலக்கால் வைக்காதீர்கள்.
இரு மடங்கு பணம் தருகிறோம் என்று ஏமாற்றும் நபரிடம் எச்சரிக்கையாக ஒதுங்கி நில்லுங்கள்.
ஆன்லைன் சூதாட்டம் அடியோடு நாசமாக்கிவிடும்.
கும்பம்
நெருக்கமான நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பீர்கள்.
மாமனார் மாமியார் வகையில் இருந்து அவசர தேவைக்கு பணம் பெறுவீர்கள்.
கதை கவிதை கட்டுரை போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள்.
மீனம்
தொழிலுக்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளை தைரியமாக நின்று தன்னம்பிக்கையுடன் முறியடிப்பீர்கள்.
தடம் மாறிச் சென்றவர்களை வீடு தேடி வரும்படி செய்வீர்கள்.
உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.