சோபகிருது வருடம் பங்குனி மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 10.04.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
பணப்பற்றாக்குறையால் சிறு வியாபாரிகள் சிரமப்படுவீர்கள்.
நீங்கள் யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களால் பயன் பெற மாட்டீர்கள்.
புதிய ஆர்டர்களைப் பெற வெளியூர் செல்வீர்கள்.
ரிஷபம்
அதிகரிக்கும் கடனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுவீர்கள்.
வேலையிடங்களில் ஏதாவது பிரச்சனையால் தொந்தரவு அடைவீர்கள்.
உங்களிடம் உதவி பெற்றவர் எதிரியாக மாறி இம்சைப்படுத்துவார்கள்.
மிதுனம்
எடுத்த காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள்.
நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக பலன் பெறுவீர்கள்.
கடகம்
கமிஷன் தொழில்களில் பெருகும் லாபத்தால் பிரமிப்படைவீர்கள்.
விவசாயப் பொருட்கள் விற்பனை மூலம் பெரும் பணம் பார்ப்பீகள்.
உதவி கேட்டு வருபவர்களுக்கு தட்டாமல் செய்வீர்கள்.
சிம்மம்
பிள்ளைகளின் விருப்பம் அறிந்து திருமண ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.
மனதுக்குப் பிடித்த பெண்ணை மணம் செய்ய பிடிவாதம் காட்டுவீர்கள்.
தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளிநாடு செல்வீர்கள்.
கன்னி
வாகனங்களில் செல்லும்போதும் வளைவுகளில் திரும்பும்போதும் கவனத்தை சிதற விடாதீர்கள்.
உறவினர் வீட்டில் துக்க சம்பவங்களில் கலந்து கொள்வீர்கள்.
துலாம்
குடும்ப குழப்பங்களை சிரமப்பட்டு களைவீர்கள்.
பெண்கள் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
வியாபாரம் லாபம் குறையாமல் நடப்பதால் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.
விருச்சிகம்
வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் சங்கடப்படுவீர்கள்.
வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள்.
அரசு வேலையில் பதவி உயர்வுஇ சம்பள உயர்வு பெறுவீர்கள்.
தனுசு
எதிர்ப்புகளை விலக்கி செயல்களில் வேகம் காட்டுவீர்கள்.
உங்கள் ஆலோசனையை கேட்டு குடும்பத்தினர் நடப்பதால் குதூகலம் அடைவீர்கள்.
அதிகமாக உழைத்து வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.
மகரம்
வங்கியில் இருந்து தேவையான நிதி உதவியை பெறுவீர்கள்.
உறவினர்களிடம் இருந்த மனத்தாங்கலை அகற்றுவீர்கள்.
காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள்.
கும்பம்
தொழிலுக்கு எதிராகக் கிளம்பிய போட்டிகளை தவிடுபொடியாக்குவீர்கள்.
பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு கடன் வாங்குவீர்கள்.
வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவீர்கள்.
மீனம்
துணிச்சலாக முடிவெடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி குடும்பத்தில் குதூகலத்தை கொண்டு வருவீர்கள். திறமையான பேச்சின் மூலம் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)