இன்றைய ராசிபலன்: 1 ஏப்ரல், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை 01.04.2024 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் விரும்பிய வகையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்

தொழிலில் தேவையில்லாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தக்க உதவியின் மூலம் அதைத் தாண்டி வருவீர்கள். வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள்.

மிதுனம்

மாமனார் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள். வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னெடுப்பு செய்வீர்கள்.

கடகம்

வெளியிடங்களில் சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மருந்து எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்களால் தொல்லைகளை சந்திப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை அடைய கடுமையாக உழைப்பீர்கள்.

சிம்மம்

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வைகாசி மாதம் வாஸ்து செய்ய தயார் ஆவீர்கள்.

கன்னி

விரும்பிய வேலையில் சேர்வீர்கள். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். விவசாய உற்பத்தியை பெருக்குவீர்கள். ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்.

துலாம்

சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் அவர்களின் உதவியை அடைவீர்கள். முந்தி வரும் கோபத்தால் சொந்தக்காரர்களிடம் பிரிவை ஏற்படுத்துவீர்கள்.

விருச்சிகம்

சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

தனுசு

சொல்வாக்கு தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள். சிறியோர்களால் அவமானப்படும் நிலைக்கு ஆளாவீர்கள். போட்டி பந்தயங்களில் அதிகமாக ஈடுபடாதீர்கள்.

மகரம்

தொட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள்.

கும்பம்

நில விற்பனையில் உச்ச நிலையை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம்

மூட்டு வலிக்காக தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகளை கிட்ட சேர்ப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024