குரோதி வருடம் ஆனி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 07.07.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள்.
கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள்.
உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி உதவி செய்வதால் சந்தோஷம் அடைவீர்கள்.
ரிஷபம்
உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் போடும் திட்டத்தை முறியடிப்பீர்கள்.
அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள்.
நெருங்கிய உறவினருக்கு பண உதவி செய்வீர்கள்.
மிதுனம்
தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
கொடுத்த கடனை திருப்பி கேட்பதில் மனத்தாங்கல் அடைவீர்கள்.
மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பீர்கள்.
கடகம்
ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள்.
வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள்.
உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள்.
சிம்மம்
சிக்கலான வேலையை முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
பெட்டிக்கடை வியாபாரிகள் முதலுக்கேற்ற லாபத்தை அடைவீர்கள்.
போட்டி பந்தயங்களில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள்.
கன்னி
வியாபாரத்தில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்.
தொழிலுக்காக தேவைப்பட்ட பணம் கைக்கு வந்து சேர்ந்து உற்சாகமடைவீர்கள்.
கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள்.
துலாம்
அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.
கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள்.
தந்தையார் மூலம் பணவரவு பெறுவீர்கள்.
விருச்சிகம்
வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை இன்று போடாதீர்கள்.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள்.
வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதமாவதால் சங்கட்டப்படுவீர்கள்.
தனுசு
துவண்டு கிடந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள்.
வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலை செய்வீர்கள்.
சிறு வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
வேலைப்பளு அதிகரிப்பதால் மூச்சு விட முடியாமல் திணறுவீர்கள்.
கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள்.
உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள்.
கும்பம்
பூர்வீகச் சொத்துக்களை விற்க முடியாமல் சங்கடப்படுவீர்கள்.
குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு மன நிம்மதி அடைவீர்கள்.
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
மீனம்
சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடி போவீர்கள்.
தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள்.
பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால் கடன் வாங்குவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)