இன்றைய ராசிபலன்: 6 ஏப்ரல், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை 06.04.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தி மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்

கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அள்ளுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள்.

மிதுனம்

என்றோ செய்த நல்ல காரியத்திற்கான பலனை இன்று அறுவடை செய்வீர்கள். குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள்.

கடகம்

வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் அலட்சியமாக திரும்பாதீர்கள் விபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். புதிய நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சிம்மம்

அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அமைதி இழந்த குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள். புதிய வாகனம் வாங்க முடிவெடுப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.

கன்னி

நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மறக்காதீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் பாதிக்கப்படுவீர்கள்.

துலாம்

மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

விருச்சிகம்

கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பார்ப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல பலனை பெறுவீர்கள்.

தனுசு

நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்க நிலையை காண்பீர்கள்.

மகரம்

சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் சங்கடங்களை சந்திக்க மாட்டீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொள்வதால் வேதனை அடைவீர்கள்.

கும்பம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். அதையும் தாண்டி வரும் அவமானத்தால் மனம் சுருங்குவீர்கள். வேலை விஷயமாக ஓய்வில்லாமல் அலைவீர்கள்.

மீனம்

ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனைகளில் சிக்க மாட்டீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024