இன்றைய ராசிபலன்: 03 ஜூலை, 2024

குரோதி வருடம் ஆனி மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 03.07.2024 சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

சீட்டுப் போட்டு சேர்த்த பணத்தைக் கொண்டு நகைகள் வாங்குவீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள்.

ஆன்லைன் வர்த்தகங்களில் லாபத்தை அள்ளுவீர்கள்.

ரிஷபம்

அடுத்தவர் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்யாதீர்கள்.

எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லை என்று வருந்தாதீர்கள்.

வெளியூரிலிருந்து நல்ல செய்திகளை தாமதமாகப் பெறுவீர்கள்.

மிதுனம்

தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதீர்கள்.

அடிதடி சம்பவங்களில் மாட்டி கொள்ளாதீர்கள்.

காவல்துறை விசாரணைக்கு உட்படுவீர்கள்.

வாகனங்களில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள்.

கடகம்

மங்கலகரமான நிகழ்ச்சியை மனம் இனிக்க நடத்துவீர்கள்.

விவசாய வேலைகளில் முனைப்புடன் இறங்குவீர்கள்.

பழைய கடனை அடைப்பீர்கள்.

வியாபாரிகள் பொருட்களைச் சுலபமாக விற்பீர்கள்.

சிம்மம்

சாதுரியமாகப் பேசி சம்பாத்தியத்தை அதிகரிப்பீர்கள்.

அரசு வேலையில் அக்கறையாக நடந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுவீர்கள்.

முதலாளிகளின் உற்சாகமான பாராட்டை பெறுவீர்கள்.

கன்னி

குடும்பத்துடன் கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் செல்வீர்கள்.

தந்தையார் வழியில் கணிசமான பண வரவை அடைவீர்கள்.

இழுபறியாக இருந்த வழக்குகளை உங்களுக்குச் சாதகமாக முடிப்பீர்கள்.

துலாம்

நண்பருக்கு இடையே எழுந்த சின்ன வாக்குவாதத்தால் பெரிய பிளவை சந்திப்பீர்கள்.

வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செல்வீர்கள்.

வியாபாரத்தில் சறுக்கல் நிலையால் சங்கடப்படுவீர்கள்.

விருச்சிகம்

மற்றவர்கள் விமர்சனங்களை ஊதித் தள்ளுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளைப் பேசிக் களைவீர்கள்.

உறவுகளைத் தேடிச் சென்று வீட்டிற்கு அழைப்பீர்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.

தனுசு

குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள் ஆத்திரப்பட்டால் அவஸ்தைப்படுவீர்கள்.

உங்கள் நிம்மதியைக் கெடுக்க சிலர் சிலர் செய்யும் முயற்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

மகரம்

உங்கள் வேலைக்கு உலை வைக்க நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள்.

பொறுப்பாக நடந்து பொல்லாப்பில் இருந்து விடுபடுவீர்கள்.

அவசியத் தேவைக்காக அலைச்சல் அதிகமாகி உடல்நிலை பாதிப்பு அடைவீர்கள்.

கும்பம்

பொருளாதார முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தைப் பார்ப்பீர்கள்.

நடைபாதை வருமானத்தை பெருக்குவீர்கள்.

மீனம்

திடீர் செலவால் நெருக்கடியைச் சந்திப்பீர்கள்.

திருமண வயதினருக்கு அதற்கான ஏற்பாட்டை செய்வீர்கள்.

வசதிக்கேற்ப புதிய வீடு மாறுவீர்கள்.

மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024