இன்று எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டிய ராசிக்காரர்கள்…

இன்று சந்திர பகவான் மீனம் ராசியில் பயணம் செய்கிறார்.
மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சற்று கவனமுடனும், எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
இப்போது மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே, இன்றைய தினம் நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது. விரயச் செலவுகளை குறைப்பீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே, நீங்கள் போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். ஷேர் மார்க்கெட் தொழிலில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழலை கொண்டு வருவீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே, எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். அரசு பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணி செய்வீர்கள். இன்று எதிர்பாராத பணவரவு தொழிலில் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் பிரச்சனைகள் தலை தூக்குவதால் தடுமாற்றம் அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாக இருக்கும். இயந்திரங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வீம்புக்காக இடையூறு ஏற்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டாம். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமம் ஏற்படும். குடும்பத்தில் கோபத்தை காட்ட வேண்டாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் இன்று நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பை கூட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை கிட்டும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இன்று ஊக்கமான முயற்சியால் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகும். பழைய கடன்களை அடைக்க பாடுபடுவீர்கள். பிள்ளைகளால் பெற்றோர் பெருமை அடைவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு வேலை செய்யும் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் சோர்வு அடைவீர்கள். சிலர் கூட இருந்து உங்களுக்கு எதிரான வேலையை பார்ப்பார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாயாரின் கால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே, குடும்ப ஒற்றுமைக்கான முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கி ஆனந்தம் கிட்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே, நீங்கள் இன்று புதிய திட்டங்களால் தொழிலை மேம்படுத்த விரும்புவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக துடைத்து எறிவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே, இன்று கடினமான வேலையையும் நீங்கள் சுலபமாக முடிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அண்டை வீட்டாருடன் இருந்த கருத்து வேறுபாடு உங்கள் அன்பான பேச்சால் விலகும்.
மீனம்:
மீனா ராசிக்காரர்களே, நீங்கள் இன்று மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஒற்றுமையே பலம் என்பதை உணர்வீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024