இன்று தை அமாவாசை: இதெல்லாம் செய்யக்கூடாது!

இன்று(பிப்.09) தை அமாவாசை என்பதால் எதெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து பார்ப்போம்.

அதன்படி, வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அமாவாசை திதி கொடுக்கும் நாளில் ஒருபோதும் இறைச்சி, வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது.

சமைக்கும் உணவில் கண்டிப்பாக பூசணிக்காயும், வாழைக்காயும் சேர்க்க வேண்டும். தை அமாவாசை விரதம் இருப்பவர்கள் அன்று முழுவதும் யாரிடமும் கோபமாக பேசக்கூடாது.

படையலிட்ட பிறகு காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.

மேலும், அமாவாசை திதி மாதா மாதம் நிகழ்ந்தாலும், தை மற்றும் ஆடி மாத அமாவாசைக்கு அதிக சிறப்புகள் உண்டு.

அந்தவகையில் இன்று (பிப்.9) தை அமாவாசையை முன்னிட்டு பிரசிதி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு செய்தனர். இதனால், அங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

Related posts

ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது!

திருக்கேதீஸ்வர ஆலய மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!