எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள்?

கார்த்திகை மாதம் 16ஆம் நாள். 02 டிசம்பர், 2023. சனிக்கிழமையான இன்று இரவு 8:23 வரை மூலம், அதன் பின்னர் பூராடம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவதால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, தொலைதூர பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும். கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தினர் கேட்கும் புதிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். சிக்கலான விடயங்களில் அனுபவசாலிகளின் அறிவுரை உதவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, வீண் செலவுகள் ஏற்படலாம். ஆதலால் சிக்கனமாக செலவு செய்யுங்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் நல்ல செய்தி தாமதம் ஆகலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் அன்பாக இருங்கள். வெளியூர் பயணங்கள் சோர்வை தரக்கூடும். பணியிடத்தில் பொறுமை காக்க வேண்டிய நாள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, தொழிலில் வளர்ச்சியை காண்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, கடினமான உழைப்பை கோரும் நாள். தொழில் சம்பந்தமான செலவுகள் வரலாம். தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் வலம் வரும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, வேலை செய்யும் இடம் சுமூகமானதாக அமையும். பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும் நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, செய்யும் செயல்களில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும். ஆதலால் பொறுமையும் கவனமும் இரட்டிப்பு மடங்கு தேவைப்படும். பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு தொடங்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தடங்கல்களை உங்கள் புத்திக்கூர்மையால் சுக்குநூறாக்குவீர்கள். உறவினர்களிடம் சில சிக்கல்கள் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, பரம்பரை சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சியும், நிம்மதியும் வந்தடையும். குடும்ப உறுப்பினர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024