இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்..

ஞாயிற்றுக்கிழமையான இன்று பகல் 2:40 வரை அஸ்தம் அதன் பிறகு சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் நாள். தொழிலில் மறைமுக எதிரிகளால் தடங்கள் ஏற்படும். வீண் அலைச்சலால் சோர்வு உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு வந்துசேரும். கணவன் மனைவியிடையே மனக்கசப்பு வரலாம். ஆதலால் விட்டுக்கொடுத்து போவது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்‌.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, உறவினர்கள் வாயிலாக சில காரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத் துணையால் அன்பும் ஆதரவும் செழிக்கும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். உறவுகளை அரவணைத்து செல்லுங்கள். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, தன்னம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் அமையும் நாள். வியாபாரத்தை நெளிவு சுழிவுடன் நடத்தி வெற்றி காண்பீர்கள். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. பேசும் பேச்சினை அளந்து பயன்படுத்துவது அவசியம். குடும்பத்தினர் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உற்சாகமான நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, வந்த எதிர்ப்புகள் தவிடு பொடி ஆகும். உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். எதிர்பாராத பணவரவும், செலவுகளும் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் அதிக கவனம் அவசியம். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. பேசும் பேச்சினை யோசித்து பேசுவது நன்மை பயக்கும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பயணங்களில் கவனமாக இருங்கள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பொறுமை அவசியம். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024

2 comments

இன்று நினைத்த காரியங்களை முடிக்கப்போகும் ராசிக்காரர்கள் - Namthesam Tamil News November 27, 2023 - 9:39 am
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]
இன்று யாருக்கெல்லாம் வெற்றிகரமான நாள்? - Namthesam Tamil News November 28, 2023 - 10:07 am
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]
Add Comment