Bayern Munich அணியில் இமாலய சாதனை படைத்த தாமஸ் முல்லர்!

பாயர்ன் முனிச் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் தமது அணிக்காக 500வது வெற்றியை பெற்றுத் தந்து சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியின் நட்சத்திர வீரரான தாமஸ் முல்லர் (Thomas Muller) பாயர்ன் முனிச் கிளப்பில் விளையாடி வருகிறார்.

பண்டஸ்லிகா தொடரில் Monachengladbach அணிக்கு எதிரான போட்டியில் Bayern Munich அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பாயர்ன் அணியில் Aleksandar Pavlovic, Harry Kane மற்றும் Matthijs de Ligt ஆகியோர் கோல் அடித்தனர்.

Monchengladbach தரப்பில் நிகோ எல்வெடி (Nico Elvedi) ஒரு கோல் அடித்தார்.

இப்போட்டியில் தாமஸ் முல்லர் கோல் அடிக்கவில்லை என்றாலும், Aleksandar Pavlovic கோல் அடிக்க உதவினார் (Assist).

அத்துடன் பாயர்ன் முனிச் அணிக்காக அவர் பெற்றுத் தந்த 500வது வெற்றி இதுவாகும்.

Bayern Munich அணிக்காக இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை முல்லர் படைத்தார்.

480 போட்டிகளில் விளையாடியுள்ள தாமஸ் முல்லர் 164 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!