உலகின் மிக வயதான விலங்கு இதுதான்! 191வயதில் கின்னஸ் சாதனை

தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது.
ஜோனாதன் என்ற ஆமை தான் தன்னுடைய 191வது பிறந்தநாளான இன்று கின்னஸ் சாதனை படைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய வயதான ஜோனாதன் ஆமை கி.பி.1832 இல் பிறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1882-இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆமையின் பழைய புகைப்படங்கள் அதன் பெருமையையும் அறிவின் வளர்ச்சியும் உணர்த்தும் என பலர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன் சுறுசுறுப்பு வயதானாலும் சிறிது குறைவில்லை என்பது வியப்பிற்குரியதாக பார்க்கப்படுகிறது.
ஜோனாதன் கண்பார்வை கண் முழுவதும் பிறை சூழ்ந்ததால் முழுவதுமாய் குறைந்துள்ளது.
ஆனால், உணவு சாப்பிடுவதில் சுறுசுறுப்பாகவும் சிறிதும் சுறுசுறுப்பு குறையாமல் நன்றாக உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று ஜோனாதனின் 191வது பிறந்தநாளில் உலகின் மிக வயதான விலங்கு என்ற பெருமைமிக்க கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!