உலகின் மிக அழகான நகரம் இதுதானாம்!

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்று உலகின் மிக அழகான நகரம் என தெரிவாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள Chester எனும் நகரம் மிகவும் அழகான நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
நகரங்களில் உள்ள வழக்கமான கட்டிடங்களின் ஒழுங்கு மற்றும் அழகியலை வைத்து இவை கணக்கிடப்படுகிறது.
Chester நகரின் கட்டிட வேலைப்பாடுகள் நேர்த்தியுடன் காண்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், இந்நகரம் வரலாற்று ரீதியாகவும் பெருமை வாய்ந்த நகரமாக விளங்குகிறது.
இந்த Chester நகரத்தில் தான் பிரித்தானிய நாட்டின் பழம்பெரும் பந்தய மைதானம் அமைந்துள்ளது.
கலைப் படைப்புகள் அடிப்படையில் மிகவும் அழகான நகரமாக இந்நகரம் தெரிவாகி உள்ளது.
இந்நகரமானது 83.7 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உலகின் மிக அழகான நகரமாக விளங்குகிறது.
அடுத்ததாக வெனிஸ் நகரம் 83.3 சதவீதத்துடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.
லண்டன் நகரமானது 82 சதவீதத்துடன் மூன்றாம் இடம் வகிக்கிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!