வாட்ஸ்அப்பில் இருந்து Third-Party Chats! விரைவில் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலில் இருந்து வேறு Chatting செயலிகளை பயன்படுத்துவபர்களுடன் Chat செய்யும் புதிய அம்சம் விரைவில் வர உள்ளதாக தெரிய வந்துள்ளது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்ட் பீட்டா Version-யில் இதே அம்சம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியனின் Digital Markets விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய அம்சம் தொடர்பிலான Screenshots வெளியாகியிருக்கிறது. அதில் ”Third-Party Chats” பெயரில் தனி Folder இடம்பெற்று இருக்கிறது. இந்த Folder-யில் மற்ற செயலிகளின் Chat-களை பார்க்க முடியும் என தெரிகிறது.

வாட்ஸ்அப்-யில் மற்ற Contact-களுக்கு Chat செய்ததைப் போலவே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் Chat செய்ய முடியும்.

இந்த அம்சமானது, Third Party Apps வாட்ஸ்அப்-யில் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் IOS வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகியுள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!