கை எடுத்து கும்பிட்ட விஜய்! கடைசியில் சொன்ன அந்த விஷயம்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த, விழாவில் பேசிய விஜய், நீட் தேர்வு குறித்து பேசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வரும் நிலையில் நீட் விலக்கே ஒரே தீர்வு. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இதுதான் எனது எண்ணம். ஆனால் இதனை நிறைவேற்ற விட மாட்டார்கள் என விஜய் பேசினார்.

அதேபோல் தேர்வு குளறுபடியால் நீட் மீது மக்களிடம் நம்பத் தன்மை போய்விட்டது. நீட் தேவையில்லை என்பதே மக்கள் எண்ணம். தமிழக மக்களின் கருத்துக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் என்ன நியாயம்? என்று விஜய் பேசினார்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் கடைசியில் மாணவர்களிடம் வெற்றி நிச்சயம் என்றும் மீண்டும் சந்திப்போம் என்றும் தனது இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறி விடைபெற்றார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!