இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்

புதன்கிழமையான இன்று இரவு வரை ஆயில்யம் அதன் பின்னர் மகம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, உறவினர்கள் வாயிலாக பண உதவி கிடைக்கும். இன்று தொடங்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, எதிர்பாராத பணவரவு உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, மறைமுக எதிரிகளால் வந்த தடங்கள் நீங்கும். தொடங்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நலம் பயக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நினைத்த காரியங்கள் சற்று இழுபறி நிலையில் இருக்கும். பொறுமையுடன் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, துணிவுடன் முடிவுகள் எடுக்கும் நாள். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தினரிடம் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள். அனைத்து விதத்திலும் சாதகமான நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம். எந்த செயலையும் நன்றாக யோசித்த பின்னர் செயல்படுத்துங்கள். வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, இன்று பணவரவு உண்டு. தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று சகோதரர்களுக்கு உதவும் விதமாக அமையும். பணவரவு இருந்தாலும், கொடுக்கல் வாங்கல் விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, உறவுகள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதால் கெடுதல் விளையாது. பொறுமை தேவைப்படும் நாள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024

1 comment

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்.. - Namthesam Tamil News November 26, 2023 - 9:03 am
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]
Add Comment