ஒரே போட்டியில் 5 கோல்கள் அடித்து அலறவிட்ட இளம் வீரர்

லூடன் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

FA கோப்பை தொடரின் நேற்றைய போட்டி Kenilworth Road மைதானத்தில் நடந்தது.

இதில் மான்செஸ்டர் சிட்டி (Manchester City) மற்றும் லூடன் டவுன் (Luton Town) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 3வது நிமிடத்திலே Man city வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) முதல் கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் கோல் வேட்டையாடினார். 18 மற்றும் 40வது நிமிடங்களில் அவர் கோல்கள் அடித்தார்.

ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் Luton town அணி வீரர் ஜோர்டான் கிளார்க் (Jordan Clark) அடித்த கிக், வீரர்களின் தலைகளை தாண்டி சென்று கோலாக மாறியது.

இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் முதல் பாதியில் Man city முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் ஹாலண்ட் ருத்ர தாண்டவம் ஆடினார்.

கிளார்க் 52வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடிக்க, 55 மற்றும் 58 என அடுத்தடுத்து ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடித்து மிரட்டினார்.

பின்னர் Man city வீரர் Mateo Kovacic 72வது நிமிடத்தில் தனது பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் Manchester City 6-2 என்ற கோல் கணக்கில் Luton Town அணியை வீழ்த்தியது.

5 கோல்கள் அடித்ததன் மூலம் எர்லிங் ஹாலண்ட், FA Cup தொடரில் அதிக கோல்கள் அடித்த Man City வீரர் என்ற 98 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!