அவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20யில் 11 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Hobart-யில் நடந்த டி20 போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் சரவெடியாய் வெடித்தார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த இங்கிலிஸ் 25 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வந்த மார்ஷ் 16 ரன்னில் ஆட்டமிழக்க, வார்னர் அரைசதம் அடித்தார்.

அவர் 36 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, மேக்ஸ்வெல் (10), ஸ்டோய்னிஸ் (9) ஆகியோரும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் டிம் டேவிட் அதிரடியாக 37 (17) ரன்களும், மேத்யூ வேட் 21 (14) ரன்களும் விளாச அவுஸ்திரேலியா 213 ரன்கள் குவித்தது.

ஆந்திரே ரசல் 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 89 ரன்கள் குவித்தது

சார்லஸ் 42 (25) ரன்னில் அவுட் ஆனதைத் தொடர்ந்து கிங் 53 (37) ரன்கள் குவித்து வெளியேறினார்.

அடுத்து வந்த வீரர்கள் அதிரடி காட்டினாலும் எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்கு போராடிய ஹோல்டர், 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் எடுத்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆடம் ஜாம்பா 3 விக்கெட்களும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!