மேக்ஸ்வெல் அணியை அடித்து நொறுக்கிய இருவர்

பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

Docklands  மைதானத்தில் நடந்த போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் ஆடியது.

தாமஸ் ரோஜர்ஸ் அதிரடியாக 23 (17) ரன்களும், வெப்ஸ்டர் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

2 சிக்ஸர்களை பறக்கவிட்ட மேக்ஸ்வெல், 10 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார்.

ரெனெகேட்ஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சால் தடுமாறிய மெல்போர்ன் ஸ்டார்ஸ், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

கார்ட்ரைட் (Cartwright) 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், அகேல் ஹொசெய்ன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து தனது இன்னிங்க்ஸை தொடங்கிய ரெனெகேட்ஸ் அணி, 17.2 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடியில் மிரட்டிய ஜேக் ஃபிரேசர், 31 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசிய நிலையில் கால்டர்-நைல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் விளாசிய ஷான் மார்ஷ், ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார்.

40 வயதாகும் ஷான் மார்ஷ் (Shaun Marsh) 2023ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் அவர் டீடீடு (பிக்பாஷ் லீக்) தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!