‘துணிவு’ பட நடிகர் திடீர் மரணம்!

அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தில் நடித்திருந்த நடிகர் ரித்துராஜ் சிங்(59) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி சீரியல்களில் மிகவும் பிரபலமானவர் ரித்துராஜ் சிங்(59). சீரியல் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர், தமிழில் வெளியான ‘துணிவு’ படத்தில் சுனில் தத்தா என்ற கதாபாத்திரத்தில் வில்லன்களில் ஒருவராக மிரட்டியிருப்பார். தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில், இவருக்கு கணைய அழற்சி பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு திடீரென மாராடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரித்துராஜ் சிங் மரணம், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீபகாலமாக 40 முதல் 60 வயதிற்குள் உள்ள திரைப்பிரபலங்கள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!