மோனா லிசா ஓவியத்திற்கு வந்த சோதனை

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) எனும் ஓவியரால் 16 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தின் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் “உணவு அக்கறை”(food response) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றுயுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ‘ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு’ உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தின்பின் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடினர்.

ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!