இரண்டாவது முறையாக சாம்பியனான சன்ரைசர்ஸ்! மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த காவ்யா மாறன்

SA20 தொடரின் இறுதிப்போட்டியில் வென்று எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை கைப்பற்றியது.

கேப்டவுனின் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அபெல் (55), ஸ்டப்ஸ் (56) அதிரடியாக அரைசதம் விளாசினர். கேப்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி டர்பன் அணி களமிறங்கியது.

டிகாக் 3 ரன்னில் வோரல் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஸ்மட்ஸ் ஒரு ரன்னில் ஜென்சென் ஓவரில் அவுட் ஆனார்.

அடுத்த 3 பந்துகளில் பனுக ராஜபக்ச டக்அவுட் ஆனார். இதனால் 7 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து டர்பன் அணி தடுமாறியது.

எனினும் அதிரடி காட்டிய முல்டர் 22 பந்துகளில் 38 ஓட்டங்கள் விளாசினார். அவரது விக்கெட்டுக்கு பிறகு டர்பன் அணி மொத்தமாக சரிந்தது.

 

பிரிட்டோரியஸ் மட்டும் போராட ஏனைய வீரர்கள் ஜென்சென் ஓவரில் நடையை கட்டினர். இறுதியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் 115 ரன்களுக்கு சுருண்டது.

அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ் 28 (17) ரன்கள் எடுத்தார். ஜென்சென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அபெல் ஆட்டநாயகன் விருதையும், ஹென்ரிச் கிளாசென் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணியின் CEO காவ்யா மாறன் மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் வெற்றியை கொண்டாடிய தருணம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!