ஆப்கானுக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை அணி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களும், இலங்கை அணி 439 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 296 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக இப்ராஹிம் ஜட்ரான் 114 ரன்களும், ரஹ்மத் ஷா 54 ரன்களும் எடுத்தனர்.

பிரபத் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 56 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றிய பிரபத் ஜெயசூரியா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!