ஜிம்பாப்பேவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இலங்கை அணி 49 ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது.

கொழும்பில் இலங்கை – ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.

டாஸ் வென்று ஜிம்பாப்பே அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் கிரேக் எர்வின் 82 (102) ரன்களும், பர்ல் 31 ரன்களும், கும்பியே 30 ரன்களும் எடுத்ததைத் தொடர்ந்து, ஜிம்பாப்பே அணி 44.4 ஓவரில் 208 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இலங்கையின் தீக்ஷணா 4 விக்கெட்டுகளும், வாண்டர்சே மற்றும் சமீரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் முன்னணி வீரர்களான குசால் மெண்டிஸ் (17), சதீரா சமரவிக்ரமா (4), அசலங்கா (0) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், தனது இரண்டாவது போட்டியில் ஆடிய ஜனித் லியனகே பொறுப்புடன் ஆடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

எனினும் அவர் 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தினை தவறவிட்டார். அதன் பின்னர் 172 ரன்களுக்கு இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

துஷ்மந்தா சமீரா (18), வாண்டர்சே (19) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஜிம்பாப்பே தரப்பில் கரவா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!