தனஞ்செய டி சில்வா தலைமையில் களமிறங்கும் இலங்கை அணி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்செய டி சில்வா தலைமையில் இலங்கை அணி விளையாட உள்ளது.

கொழும்பில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இலங்கை அணிக்கு தனஞ்செய டி சில்வாவும், ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாஹிடியும் தலைமை தாங்குகின்றனர்.

இலங்கை அணியை பொறுத்தவரை அனுபவ வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணாரத்னே பேட்டிங்கில் பக்க பலமாக இருப்பார்கள்.

ஆனாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரிய அணிகளுக்கே பயத்தை காட்டி வரும் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்டிலும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி தனது டெஸ்ட் வரலாற்றில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!