மொத்த கோல்களையும் அணிக்காக அடித்த ஒற்றை வீரர்!

பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி 3-1 என்ற கோல் கணக்கில் பிரென்ட்போர்டு அணியை வீழ்த்தியது.

Gtech Community மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (Manchester City) மற்றும் பிரென்ட்போர்டு (Brentford) அணிகள் மோதின.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பிரென்ட்போர்டு அணி வீரர் Neal Maupay, தனியாளாக பந்தை எதிர்முனைக்கு கடத்திச் சென்று அபாரமாக கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

அவர்களின் முயற்சிக்கு ஒரு வழியாக 45+3வது நிமிடத்தில் Phil Fodenn மூலம் வெற்றி கிடைத்தது.

பிரென்ட்போர்டு அணி வீரர் கோல் கம்பத்தை நோக்கி வந்த பந்தை தலையால் முட்டி தடுத்தார். ஆனால் அப்போது விரைந்து செயல்பட்ட Phil Foden மிரட்டலாக கோல் அடித்தார்.

அதன் பின்னர் அவரே 53வது நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை தலையால் முட்டி கோல் ஆக மாற்றினார்.

அடுத்து 60வது நிமிடத்தில் பிரென்ட்போர்டு அணி வீரர் அடித்த ஷாட்டை மான்செஸ்டர் கோல் கீப்பர் அபாரமாக செயல்பட்டு தடுத்தார்.

ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் Phil Foden மின்னல் வேகத்தில் பயணித்து ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரென்ட்போர்டு அணியை வீழ்த்தியது. இது மான்செஸ்டர் அணிக்கு 15வது பிரீமியர் லீக் வெற்றி ஆகும்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!