இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தைவானில் 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
தைவானை சேர்ந்தவர் சியோயு. இவர் தீவிரமான காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக, கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுசிறு கற்களாக நிறைய கற்களும், திரவமும் சிறுநீரகத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் வலது பக்க சிறுநீரகம் வீங்கியது போல இருந்துள்ளது.
திரவம் வெளியேற ஆன்டிபயாட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 5 மி.மீ முதல், 2 செ.மீ வரையில் சுமார் 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சிறுநீரகத்தில் கல் ஏற்படுத்தும் வலியானது மிகவும் மோசமான வலிகளுள் ஒன்றாகும்.
சோடியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகள், ஹைபர்பாரைராய்டிசம் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டினால் சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
போதுமான தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் இல்லாத போது சிறுநீர் அளவு குறைகிறது. இதனால் படிகங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு கற்களாக உருவெடுக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் தண்ணீரை பயன்படுத்தாமல் அதிகம் பபுள் டீ எனும் பானத்தையே அதிகம் விரும்பி பருகிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!