ஜபமாலையா அர்ச்சனாவின் வெற்றிக்கு காரணம்?

பிக் பாஸ் சீசன் 07இன் வெற்றியாளர் அர்ச்சனாவிற்கு பிராவோ கொடுத்த ஜபமாலை பிரேஸ்லெட் தான் காரணம் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.

இந்திய பிரபல டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 07 தற்போது முடிவடைந்துள்ளது.

பிக் பாஸ் வரலாற்றிலேயே அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம்.

ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தைரியம் இல்லாமல் அழுது கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு, பிராவோ வெளியே செல்லும் தனது கையில் வைத்திருந்த ஜபமாலை கைசெயினை பரிசாக கொடுத்து சென்றார்.

இதனால் அர்ச்சனாவிற்கு ஒரு நேர்மறையான எனர்ஜி வந்த நிலையில், தனி ஆளாக புல்லிங் கேங்கை விளாசி எடுத்தார். இந்த ரகசியம் பலருக்கும் தெரியாமல் தான் இருந்தது.

கடைசி வாரத்தில் உள்ளே வந்த பிராவோ ரகசியத்தை உடைத்தார். ‘தான் தந்த மாலை பத்துமலை முருகன் கோயிலில் வாங்கியது அல்ல. ஆனால் அது உன் தைரியத்தை எப்படி உயர்த்தியது பார்த்தாயா’ என்று கேட்டுள்ளார்.

அவரின் திறமையான ஆட்டம்தான் வெற்றிக்குக் காரணமென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. இதுபோன்ற சிறு விஷயங்களால் கிடைக்கும் பாசிட்டிவிட்டி பல நேரங்களில் நமக்கு உதவியாக இருந்திருக்கும்.

இந்நிலையில் அர்ச்சனா உண்மையிலேயே அதை நம்பினார். நம்பிக்கையை ஊன்றுகோலாகக் கொண்டு தைரியமாக எதிர்கொண்டார். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கே இறைவனின் அருளும் இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!