வெளியானது வினாத்தாள் – பெண் பொறுப்பாளரும் சிக்கினார்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில், மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மண்டப பெண் பொறுப்பாளரே நேற்று கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பாளர், மண்டபப் பணியாளர் மற்றும் முதலில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சை மண்டப பொறுப்பாளர் பிலியந்தலை பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!