ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்த போராட்டக் குழு! அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுவான UNLF அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமைதி வழிக்கு திரும்பியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சில இனக்குழுவை சேர்ந்தவர்கள் அமைப்பை உருவாக்கி ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடி வந்தனர்.
மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) அமைப்பினர் இன்று (நவம்பர் 29) அமைதிக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி செயல்பட்டு வந்துள்ளனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்ததையொட்டி இது சாத்தியப்பட்டுள்ளது.
இக்குழுவினர் ஆயுதம் ஏந்தி போராடுவதை விடுத்து அரசுடன் இணக்கமாக செல்ல ஒப்புக்கொண்டு தன் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு. வடகிழக்கில் நிரந்தரமாக அமைதியை நிலைநாட்ட அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி UNLF அமைப்பு அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அவர்களை சனநாயக செயல்முறைக்கு வரவேற்கிறேன். இது ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.
அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!