சுரங்கத்தில் மாட்டிய தொழிலாளர்களை மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்!

நவம்பர் 12ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுமார் 40 கட்டுமான தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, நார்வே மற்றும் தாய்லாந்தின் எலைட் மீட்பு குழுவினர் உதவியுடன் NDRF அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
மீட்புக்குழுவினர் 30 மீட்டர் வரையிலான 5 துளைகளையிட்டு உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கான ஆக்ஸிஜன் மற்றும் உணவுகளை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், மீட்பு பணியில் 6ம் நாளாக மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தபோது சுரங்கத்தினுள்ளே பெரிய அளவில் உடைந்து விழும் சத்தம் கேட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளே இருப்பவர்கள் கதி என்ன என்று இன்னும் அதிகாரப்பூர்வமன அறிவிப்புகள் வெளிவராத நிலையில் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதையானது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித் தலங்களை இணைக்கும் பாதையாகும்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

17 நாட்கள் போராட்டம்..பத்திரமாக மீட்கப்பட்ட 41 சுரங்கத் தொழிலாளர்கள் - Namthesam Tamil News November 29, 2023 - 10:52 am
[…] மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக […]
Add Comment