வானை தொட்ட கரட்டின் விலை

இலங்கையின் பொருளாதாரம் பாரிய பிரச்சினைகளை முகங்கொடு நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று ஒரு கிலோ கரட் 2200 ரூபா சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கரட் 1400 ரூபாய் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

கரட்டிற்கு மேலதிகமாக பீன்ஸ் 1400 ரூபாவிற்கும் பீட்ரூட் 1200 ரூபாவிற்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1800 ரூபாவாக அதிகரித்திருந்தது. நுவரெலியா தோட்டங்களில் இருந்து விவசாயிகள் ஒரு கிலோ கரட்டை1700 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர்.

சாதாரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 40,000 முதல் 45,000 கிலோகிராம் வரையான கரட் கிடைக்கும், ஆனால் இந்த நாட்களில் பெறப்படும் கரட்டின் மொத்த அளவு 5,000 கிலோகிராமிற்கும் குறைவாகவே குறைந்துள்ளது.

இதன்காரணமாக கரட்டின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் உயரும் என பொருளாதார மைய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கரட்டின் விலை அதிகரிப்பு காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கரட் விற்பனை செய்யப்படுவதில்லை.

தற்போது மழையுடனான காலநிலை குறைந்து வரும் நிலையில் கரட் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் அறுவடை செய்யப்படும், எனவே அதுவரை கரட்டின் விலை உயரும் என்று பொருளாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!