இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
இந்திய மன்றம் மற்றும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் காரணமாக அங்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ரணில் விக்ரமசிங்க பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெர்த் நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளனர்.
அபோது, இருநாடுகளின் திட்டங்கள் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.