ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஜெலென்ஸ்கியை சந்தித்த போலந்து பிரதமர்

தங்கள் நாட்டின் ஆதரவை தெரிவித்து போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை உக்ரைனில் சந்தித்தார்.

ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் உக்ரைனுக்கு ஆதரவு போலந்து குரல் கொடுத்துள்ளது. இதன் ஒருபடியாக, அந்நாட்டின் நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் (Donald Tusk) உக்ரைன் சென்றுள்ளார்.

அங்கு அவர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், தானிய ஏற்றுமதி மற்றும் Trucking தொடர்பாக தங்கள் நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஒரு புரிதலை அடைந்ததாக கூறிய டஸ்க், மீண்டும் தான் பிரதமரான பிறகு சென்ற முதல் வெளிநாட்டு தலைநகரம் கீவ் என்று கூறினார்.

மேலும் அவர், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்ததுடன் புதிய இராணுவ உதவிப் பொதியை அறிவித்தார்.

அதில் பாரிய ஆயுதங்களை வாங்குவதற்கான கடன் மற்றும் அவற்றை ஒன்றாக உற்பத்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறியும் அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கும்.

ரஷ்யா கடுமையாக சாடிய டொனால்டு டஸ்க், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘தீமையுடன் உக்ரைன் புரியும் இந்தப் போரில், போலந்து மிகவும் நம்பகமான மற்றும் நிலையான நட்பு நாடு என்ற உணர்வை உருவாக்குவது மிகவும் முக்கியம்’ என தெரிவித்தார்.

அத்துடன் ‘சில முரண்பாடுகள் உள்ளன, அவற்றை நாங்கள் நன்கு அறிவோம், அவற்றைப் பற்றி பேசுவோம். ஆனால், நட்பின் உணர்வில் மட்டுமல்ல, வெளிப்படையாக. ஆனால் இந்த அணுகுமுறையைக் கொண்டு பிரச்சனைகளை விரைவில் தீர்ப்போம், அவர்களை தக்கவைக்கவோ அல்லது பெருக்கவோ அல்ல’ எனவும் குறிப்பிட்டார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!