கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை தரவரிசையில் பின்னுக்கு தள்ளிய வீரர்கள்!

கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னனாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 16 கோல்கள் அடித்தும், சவுதி ப்ரோ லீக் சிறந்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தினை பிடித்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
போர்த்துக்கலை சேர்ந்த ரொனால்டோ அல்-நஸர் அணிக்காக அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இருப்பினும் அவரால், Sofascore தொகுத்த பட்டியலின் படி சவுதி ப்ரோ லீக் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையே பெற முடிந்தது.
முன்னதாக அல் ஃபடே அணியின் மிட்ஃபீல்டர் “மௌரட் பட்னா” (Mourad Batna) 8.11 சராசரியுடன், 7 கோல்கள் அடித்து, 7 கோல்கள் உதவிகளுடன் முதலிடம் பிடித்தார்‌.
அடுத்ததாக அல் இட்டிஹாட் அணியின் “இகோர் கொரொனாடோ” (Igor Coronado) 10 ஆட்டங்களில் விளையாடி, 8.09 சராசரியுடன் 4 கோல்கள், 5 கோல்கள் உதவிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
அடுத்ததாக 17 போட்டிகளில் விளையாடி 16 கோல்களுடன், 7 கோல்கள் உதவிகளுடன் 8.07 சராசரியுடன் ரொனால்டோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகள் மற்றும் தனது தேசிய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த ஆண்டு அல்-நஸர் மற்றும் போர்த்துகல் அணிகளுக்காக 49 ஆட்டங்களில் 45 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் 12 கோல் உதவிகளும் அடக்கம்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!

1 comment

உலகக்கோப்பை அரையிறுதியில் நுழைந்த ஜெர்மனி! சாம்பியன் ஆவோம் என சூளுரை... - Namthesam Tamil News November 25, 2023 - 12:02 pm
[…] உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]
Add Comment