இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் சதம் விளாசிய வீரர்!

ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராஹிம் ஜட்ரான் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார்.

கொழும்பில் நடந்து வரும் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 198 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, இலங்கை அணி முதல் இன்னிங்க்சை தொடங்கியது.

ஏஞ்சலோ மேத்யூஸ் 141 ரன்களும், சண்டிமல் 107 ரன்களும் எடுக்க இலங்கை அணி 400 ரன்களை கடந்தது.

410 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்த இலங்கை, அடுத்த 29 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 439 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

நவீத் ஜட்ரான் 4 விக்கெட்டுகளும், நிஜாத் மசூத் மற்றும் கியாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

இப்ராஹிம் ஜட்ரானும், நூர் அலி ஜட்ரானும் முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தனர்.

நிதானமாக ஆடிய நூர் அலி 47 (136) ரன்கள் எடுத்த நிலையில் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ரஹ்மத் ஷா தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரானுடன் கைகோர்த்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஜட்ரான் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 42 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இப்ராஹிம் ஜட்ரான் 101 (217) ரன்களுடனும், ரஹ்மத் ஷா 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!