கடத்தல் புகாரினால் பிரான்ஸில் நிறுத்தப்பட்ட விமானம் இந்தியாவை சென்றடைந்தது ..

கடந்த மூன்று நாட்களாக 303 பயணிகளுடன் பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்ட தற்போது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து அமெரிக்கா நாடான நிகாராகுவாவுக்கு சென்ற இந்த விமானம், பிரான்ஸ் வட்ரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதில் பயணித்த பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டது.

முதலில் எரிப்பொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விமானம், பின்னர் மனித கடத்தல் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

கிட்டத்தட்ட 3 நாட்கள் விமான நிலைய வளாகத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதில் 2 பேரை மட்டும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, விமானத்தில் பயணித்தவர்களில் பலர் நிகாரகுவாவுக்கு சென்று அங்கிருந்து கனடா மற்றும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல இருந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 303 பயணிகளில் 301 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்ட விமானம் இந்தியாவின் மும்பை நேரடியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தடுத்து நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் சிலர், தங்களை பிரான்ஸ் நாட்டிலேயே அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி கோரிக்கை முன்வைத்து இருப்பதாக மார்னே பிராந்திய மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் மனித கடத்தல் தொடர்பான சாத்தியங்களை விமான நிறுவனம் மறுத்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!