காளை சண்டையில் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்! அதிர்ந்த பார்வையாளர்கள்

மெக்சிகோவில் இளம் காளை சண்டை வீரர் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு போராடும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் வெற்றியாளர்களால் கொண்டு வரப்பட்டது மெக்சிகன் காளை சண்டை. தலைநகர் மெக்சிகன் சிட்டியில் இதற்கு தடை உள்ளது. இதற்கு காரணம் விலங்கு உரிமை ஆர்வலர்களின் போராட்டம் ஆகும்.

ஆனாலும், மெக்சிகோவின் Tlaxcala நகரில் இந்த காளை சண்டை விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை Tlaxcala -யில் காளை சண்டை விளையாட்டு நடந்தது. இதில் ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா (26) என்ற வீரர் சாகச விளையாட்டில் ஈடுபட்டார்.

 

 

அவர் கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்தபோது, திடீரென நெருங்கிய காளை அவர் சுதரிப்பதற்குள் முட்டித் தூக்கி, சில அடி தூரம் இழுத்துச் சென்றது.

இதனைக் கண்ட மைதான ஊழியர்கள் உடனடியாக களத்தில் இறங்கி ஜோஸை மீட்டுச் சென்றனர்.

தூக்கி வீசப்பட்ட ஜோஸுக்கு கண், தாடை, காது மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜோஸ் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!