அவலத்தின் உச்சம்! காஸாவில் மனித சடலங்களை உண்ணும் நாய்கள்

பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள மருத்துவமனைகள், சுற்றிலும் உள்ள பகுதிகளை இஸ்ரேலிய படைகள் கையிலெடுத்துள்ளதால் எந்தவித செயல்பாடுகளும் இன்றி முடங்கி கிடக்கிறது.
ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேலிய தாக்குதல் நடந்துவரும் நிலையில், மருத்துவமனைகளின் இயக்கம் முடங்கி வருகிறது.
அவற்றிற்கு தேவையான பொருட்கள், எரிபொருள், மின்சாரம் ஆகியன கிடைக்காமல் போனதால் மருத்துவமனையே ஒரு கல்லறையாக மாறியுள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் குறைந்தது 2,300 பேர் இருப்பதாக ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 650 நோயாளிகள், 200 முதல் 500 ஊழியர்கள் மற்றும் 1500 மக்கள் தஞ்சம் புகுந்தவர்களாக இருக்கின்றனர். மருத்துவமனையின் மேலாளர் முகமது அபு செல்மியா, சுமார் 150 உடல்கள் அப்புறப்படுத்த முடியாததால் சிதைந்து, அசுத்தமான துர்நாற்றம் வீசுகிறது என்று கூறியுள்ளார்.
ஊடகத்திடம் அவர் “அழுகிய உடல்களை புதைக்க, அந்த உடல்களை மருத்துவமனையை விட்டு வெளியேற்ற இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அதனால் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து நாய்கள் அந்த உடல்களை உண்ணத் தொடங்கிவிட்டன.
மேலும் மின்சாரம் இல்லாத காரணத்தால் இன்குபேட்டர்களில் வைக்க முடியாமல் இருக்கும் டஜன் கணக்கான குழந்தைகள் கதி என்ன என்பது குறித்தும் கவலைகள் உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள்” என்று கூறியுள்ளார்.
அத்துடன் குழந்தைகளை வெளியேற்றும் முயற்சிக்காக இஸ்ரேலிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!