இலங்கையில் திருமணம் செய்பவரின் எண்ணிக்கை குறைகிறது!

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பேராசிரியல் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சமீபகாலமாக நாட்டில் திருமணம் செய்து கொள்பவர்களின் சதவீதம், பிறப்புவீதம் குறைந்து வருகிறது. அதேபோல், புதிதாக பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் குறைந்துள்ளது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு, தகுதியான ஆண் ஒருவரை தேடுவது கடினம். அடுத்த 10 ஆண்டுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான குறைவைக் காண முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!