உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு-2024

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் 5வது நிர்வாகத் தெரிவும் 18.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் பொது சபை உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

 

பொதுச்சுடர்கள் ஏற்ப்பட்டு, தமிழீழ தேசிய கொடி ஏற்றலை தொடர்ந்து ,அக வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 

நடப்பாண்டு நிர்வாகத்தின் தலைமையில் சந்திப்பின் நடைமுறைகள் வாசிக்கப்பட்டதுடன் செயற்பாட்டு ஒழுங்கு விதி கோவையின் சில முக்கிய பகுதிகளும் சபைனருக்கு அறிய தரப்பட்டது.

சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நிர்வாக உறுப்பினர்கள், இளையோர், சிறப்பு வருகையாளர்கள், பொது வருகையாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். தோற்றுவிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டு சபைனர் முன் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பிரதான நிர்வாகம் மற்றும் துணை அமைப்புகளின் கடந்த கால செயற்பாட்டு அறிக்கைகள், கணக்கு அறிக்கைகள் வாசித்து அளிக்கப்பட்டது.

 

இன்றைய நாளின் பிரதான விடயமான நிர்வாக முன்மொழிவு நடைபெற்றது. உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள் இடையே கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்ற ஆய்வுகள், கருத்துக்களின் அடிப்படையில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நடப்பாண்டு காலப்பகுதிக்கான மேலாண்மை பணிப்பாளராக திரு.வசந்தன் அவர்களும், துணை மேலாண்மை பணிப்பாளராக திரு.வீரன் அவர்களும், செயலாளராக திரு.வினோதன் அவர்களும், துணைச் செயலாளராக திரு.சதா அவர்களும், பொருளாளராக திரு.விஜி அவர்களும் நிர்வாகத்தினால் முன்மொழிக்கப்பட்டு சபையினரின் ஏகோபித்த ஒப்புதலுடன் தெரிவு செய்யப்பட்டனர்.

 

அதேபோன்று துணை நிர்வாகங்களுக்கான பணிப்பாளர்களும், ஏனைய பொறுப்பாளர்களும் முன்மொழியப்பட்டு சபையினரின் ஏகோபித்த ஒப்புதல் உடன் பணி கடமைகளை பொறுப்பேற்றினார். தொடர்ந்து புதிய நிர்வாகம் உரிய முறைப்படி கடமைகளை பொறுப்பேற்று, தனித்தனியாக தமது கடமைகள் தொடர்பான உறுதிப்பிரமாணத்தினை சபையினர் முன்னே ஒப்புக் கொடுத்தனர்.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வு உறுதி ஏற்புடன் நிறைவடைந்தது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!