11 வயது மகனை பெல்ட்டால் நெரித்துக் கொன்ற தாய்!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது மகனை பெல்ட்டைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் 51 வயது ரூத் டிரைன்சோ. இவரது கணவர் டேனியல் ஒயிட்ஹெட்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது மகன் மேத்யூவை பெல்ட் கொண்டு கழுத்தை நெரித்து டிரைன்சோ கொலை செய்துள்ளார்.

அச்சமயம் அவரது கணவர் டேனியல் வேறொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். மகனை கொன்ற பின்னர் டிரைன்சோ காரில் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

மேத்யூ இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டேனியல் பொலிசாரை அழைத்துள்ளார். படுக்கையறையில் பெல்ட் கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து முதல் நிலை குற்றவாளி என டிரைன்சோ அடையாளம் காணப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

குடும்பத்தில் நிலவிய பொருளாதார பிரச்சனை காரணமாக, கணவரை பழி வாங்க அவர் இவ்வாறு செய்துள்ளார் என தெரிய வந்தது.

ஆனால், டிரைன்சோவின் வழக்கறிஞர்கள், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதால் இந்த கொலையை செய்ததாக வாதிட்டனர்.

அதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், டிரைன்சோ தனது மகனைக் கொன்றது தவறு என்பதை நன்கு அறிந்திருந்தார் என்றும், அவர் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டார், அவருக்கு மனநோய் அல்ல என்றும் வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதி டிரைன்சோவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். எனினும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!