கோமாவில் இருந்த மகளை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகளை தாய் ஒருவர் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் மெச்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017ம் ஆண்டு கார் விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலைக்கு சென்றார்.

இதனால், அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது தாய் பெகி மீன்ஸ் தனது மகளை எப்படியாவது கோமாவில் இருந்து மீட்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் போராடி வருகிறார்.

இதற்காக பல முறை கோமாவில் இருக்கும் மகளிடம் பேசியபடி இருந்துள்ளார். அப்படி ஒரு முறை அவர் ஏதோ ஒரு நகைச்சுவை சொன்னபோது, அதைக் கேட்டு ஜெனிபர் சிரித்துள்ளார். இதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த அவரது தாய், அதன்பின் அவரது தாய் தனது மகள் குணமடைந்து வருவதை நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் 2022ல் நடந்துள்ளது. ஆனால், தற்போதுதான் வெளியில் தெரியவந்துள்ளது. அந்த நகைச்சுவை என்ன  என்பதும் கூறப்படவில்லை.

அந்த சிரிப்புக்கு பின் ஜெனிபரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். முதலில் கண்களை மூடி இருந்த ஜெனிபர், தற்போது அதிக நேரம் கண் விழித்து இருப்பதால் அவரது தாயின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இன்னும் அவர் முழுமையாக குணமடையாததால், அவரது சிகிச்சைக்காக GoFundMe இயக்கம் மூலம் உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!