மாஸ் காட்டிய இந்தியா! WC இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

19 வயதுக்குட்பட்டோருக்கான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்க வீரர்களாக லுகன் ட்ரி ப்ரிட்டோரியஸ், ஸ்டீவ் ஸ்டாக் களமிறங்கினர்.

இதில் ஸ்டீவ் ஸ்டாக் 14 ரன்களில் ராஜ் லிம்பானி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் டிகர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால், 46/2 என தடுமாறிய தென்னாப்பிரிக்கா அணியை லுகன் ட்ரி ப்ரிட்டோரியஸ்-ரிச்சர்ட்ஸ் செலிட்ஸ்வான் ஜோடி மீட்டது. 118 ரன்கள் எடுத்தபோது அரைசதம் அடித்து சிறப்பாக ஆடி வந்த லுகன் ட்ரி ப்ரிட்டோரியஸ் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரிச்சர்ட்ஸ் செலிட்ஸ்வான் 64 ரன்களில் நடையை கட்ட, மற்ற வீரர்கள் சொறப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 244/7 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் நாமன் திவாரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்கள் அட்தர்ஸ் சிங் டக் அவு, அர்ஷின் குல்கர்னி 12, முஷ்கர் கான் 4 என 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் ஆட்டத்தை கையில் எடுத்த உதய் சஹாரனா(81)-சச்சின் தாஸ்(96) ஜோடி சிறப்பாக ஆடியது. இதனால் 48.5 ஓவரில் இந்திய அணி 248/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!