பாரீஸ் மக்களுக்கு முக்கிய கோரிக்கை!

பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகத்து 11 வரை ஒலிம்பிக் போட்டிகளும், ஆகத்து 27 முதல் செப்டம்பர் 8 வரை பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இதனால், இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில், பாரிஸில் வாழ்பவர்கள் பார்சல்கள் எதையும் அனுப்ப வேண்டாம் என போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஏனெனில், ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். இதனால், கடுமையான செக்கிங் இருக்கும். எனவே, பார்சல்களை அனுப்ப வேண்டும் என்றால் பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியில் அமைந்துள்ள பார்சல் பெறும் இடங்களுக்கு நடந்தோ, சைக்கிளில் சென்றோ பார்சல்களை கொண்டு சென்று உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!