உலகின் மிக நீளமான ஓவியத்தை சீன பெண்ணொருவர் வரைந்து சாதனைப்படைத்துள்ளார்.
இவர் சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர் ஒருவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார்.
இது தொடர்பான காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.