ரஷ்ய அதிபரை எதிர்த்த தலைவர் மரணம்!

ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மர்மமான முறையில் சற்றுமுன் உயிரிழந்தார்.

மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தை தூண்டுதல், நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல், ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டார்.

19 ஆண்டுகள் இவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வாக்கிங் சென்ற அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அலெக்ஸி நவல்னி, ‘எதிர்கால ரஷ்யா’ என்று அரசியல் தலைவர்களால் அழைக்கப்பட்டவர் ஆவர். ரஷ்ய அதிபர் புதின் செய்து வரும் ஊழலை தைரியமாக எதிர்த்தவர்.

எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதனால், இவருக்கு ரஷ்யா மக்களிடையே செல்வாக்கு உயர்ந்தது. கடந்த 2011ம் ஆண்டு கட்சியை திருடர்களையும் சதிகாரர்களையும் கொண்டதுதான் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி என வெளிப்படையாக பேசினார்.

இதனால், இவருக்கும், புதினுக்கும் இடையே பகைமை அதிகரித்தது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். புதின் பொதுவாகவே தன்னை எதிர்க்கும் நபர்களை காலி செய்துவிடுவார் என்ற ஒரு வரலாறு உண்டு என்பதால் உலக தலைவர்களிடையே அலெக்ஸி நவல்னி மரணம் மிகப் பெரிய் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Alexei Navalny died

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!