இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்..

Shunichi Suzuki

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்….

ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, தாம், இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு செல்லவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கடன் மறுசீரமைப்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம், ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குநர் குழு இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் வட்டி விகிதங்களைக் குறைத்தல் என்பன தொடர்பில் அடிப்படை உடன்பாட்டை எட்டியிருந்தன.

இந்தநிலையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை நிலையான முன்னேற்றத்தை அடைவது முக்கியமானது என ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!